Thursday, March 17, 2011


இரவு நேர வெண்மதியின் தேகம் அழகா !
என் இதயம் கவர்ந்த முழுமதி அவளின் முழுமுகம்
அழகா !

செடியில் பூத்துகுலுங்கும் செண்பகபூ அழகா !
என் செல்ல சீமாட்டி இதழ் தந்த புன்னகைபூ அழகா!

தாமரை இலை மேல் நீந்திநின்ற தண்ணீர்த்துளி அழகா !
என் தங்கத்தாரகை கவலையில் சிந்திய கண்ணீர்த்துளி அழகா !

கார்மேகம் கண்ட மயில் ஆட விரித்த அதன் தோகை அழகா !
இல்லை காற்றில் அவிழ்ந்து தவழ்ந்த என் காதலியின் கார்கூந்தல் அழகா !

ரோஜா இதழில் விடியலில் விழுந்த பனித்துளி அழகா !
என் காதல் தோழியின் கன்னத்தில் படர்ந்த முகப்பரு அழகா !

ஒப்பிட முடியாது ஏனெனில் அவள் முன் நின்றால்
அந்த இயற்கைக்கும் இழப்புதான் மிஞ்சும்.......

- ஈஸ்வர்

Tuesday, March 15, 2011


Dream what you want to dream, go where you want to go, be what you want to be.
Because you have only one life and one chance to do it all.